தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இன்று இந்தியா வருகை! முர்மு, மோடியுடன் சந்திப்பு!

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இன்று இந்தியா வருவது குறித்து...

Nepal PM Balendra Shah

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா - கோப்புப் படம்

Updated On :

நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா அரசு முறைப் பயணமாக இன்று (நவ. 22) இந்தியாவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற ஜென் - ஸி போராட்டங்களைத் தொடர்ந்து, இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற பாடகர் பாலேந்திர ஷா, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்ற பின்பு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பாலேந்திர ஷா ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

நேபாள பிரதமரின் 2 நாள் இந்தப் பயணத்தில், அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னி வாக்லே, வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் ஆகியோர் உள்பட சுமார் 34 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகின்றனர்.

இந்தப் பயணத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்திக்கும் நேபாள பிரதமர் ஷா, இருநாடுகள் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.

இந்தச் சந்திப்புகளில், கல்வி, சுகாதாரம், விவசாயம், விண்வெளி, பேரிடர் மேலாண்மை மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேபாளத்தில் புதியதாகப் பதவியேற்கும் பிரதமர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருவதையே பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கடந்த 2024 ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனாவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Nepal PM Balendra Shah To Arrive In New Delhi Today On A Two-Day Visit To India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.