எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

பம்பையில் நீராடும் பக்தர்களுக்கு கேரள அரசு புதிய எச்சரிக்கை!

பம்பையில் நீராடும் பக்தர்களுக்கு கேரள அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்து...

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில் - கோப்புப்படம்

Updated On :

பம்பையில் நீராடும் பக்தர்கள் துணிகளை வீசினாலோ, குப்பைகளைக் கொட்டினாலோ ரூ. 5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என கேரள அரசு எச்சரித்துள்ளது.

பம்பையில் நீராடி அங்குள்ள கணபதியை வழிபட்ட பின்னரே, இருமுடிக்கட்டுடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி ஐயப்ப பக்தர்கள் தங்களுடைய பயணத்தைத் தொடங்குவர். பம்பையில் நீராடும்போது பக்தர்கள் பலரும் அவர்களின் ஆடைகளை பம்பை ஆற்றிலேயே விட்டுவிடுவர். இதன் மூலம் தங்களது பாவ, வினைகள் விலகும் என்பது அவர்களது நம்பிக்கை.

சபரிமலை யாத்திரை காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் பம்பையில் நீராடுவது மற்றும் இதுபோன்று உடைகளை வீசுவதால் அந்த நதி கடுமையான மாசுபாட்டிற்கு உள்ளாகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு, பம்பை ஆற்றில் நீராடும் பக்தர்கள், அப்பகுதிகளில் தங்களது ஆடைகள் அல்லது குப்பைகளை வீசினால் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அபராதத்தை 15 நாள்களுக்கு செலுத்தவில்லை என்றால் பிஎன்எஸ் மற்றும் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் இந்த விதி ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத்தொகை பம்பை மற்றும் சபரிமலை பகுதிகளில் சுகாதாரத்தைக் காக்கவும் கழிவு மேலாண்மை மற்றும் ஆறு சுத்திகரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Kerala government has stated that a fine of up to Rs. 5,000 will be imposed on devotees who discard clothing or dump waste while bathing in the Pamba River.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.