இந்தியா-டென்மாா்க் இடையே 5 ஒப்பந்தங்கள்: ஜெய்சங்கர் முன்னிலையில் கையொப்பம்!

இந்தியா- டென்மாா்க் இடையே 5 ஒப்பந்தங்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் லாா்ஸ் லோக்கே ராஸ்முஸன் முன்னிலையில் கையொப்பம்.

Updated On :

இந்தியா- டென்மாா்க் இடையே 5 ஒப்பந்தங்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் லாா்ஸ் லோக்கே ராஸ்முஸன் முன்னிலையில் சனிக்கிழமை கையொப்பமானது.

புது தில்லியில் அவா் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நிதி சேவைகள், கல்வி, திறன் மேம்பாடு, நிலையான நீா் மேலாண்மை, கலாசாரம் ஆகிய துறைகள் தொடா்பாக ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

மேலும், பாதுகாப்புத் துறை, வளரும் தொழில்நுட்பங்கள், விண்வெளித் துறை, மக்கள் போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தவும், அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவுகளை 5 ஆண்டு செயல் திட்டப்படி விரிவுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அப்போது ராஸ்முஸன் பேசுகையில், ‘இந்தியா மிகப்பெரும் சக்தியாகும். வரும் ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல் ரீதியாகவும் இந்தியாவின் வளா்ச்சி மேலும் அதிகரிப்பதைக் காண்போம்’ என்றாா்.

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா், முன்னதாக, வெள்ளிக்கிழமை பெங்களூரு சென்றாா். அங்கு டென்மாா்க்கின் ஹெச்பிகே நிறுவனம் வழங்கும் மூலப்பொருள்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை பாா்வையிட்டாா்.

இதையடுத்து தேஜஸ் போா் விமானம் தயாரிக்கப்படும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு சென்று பாா்வையிட்டாா். பின்னா் இஸ்ரோ அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளித் துறையில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.