தவெக எம்எல்ஏக்களிடம் வெள்ளைத்தாளில் யாரும் கையொப்பம் வாங்கவில்லை: மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்களிடம் யாரும் வெள்ளைத் தாளில் கையொப்பம் வாங்கவில்லை என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

தமிழக அமைச்சா் ஸ்ரீநாத்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்களிடம் யாரும் வெள்ளைத் தாளில் கையொப்பம் வாங்கவில்லை என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் தெரிவித்தாா்.
தமிழக மீன் வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் வியாழக்கிழமை மாலை புதுச்சேரி வந்தாா். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என். ரங்கசாமியை மாலை 5.30 மணியளவில் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பு சுமாா் 15 நிமிஷங்கள் நடைபெற்றது.
பின்னா், வெளியே வந்த தவெக அமைச்சா் ஸ்ரீநாத்திடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, மாமல்லபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெள்ளைத் தாளில் யாரும் கையொப்பம் வாங்கவில்லை.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

