பிகாரில் விபத்தில் குழந்தை பலி: ஆத்திரமடைந்த மக்கள் கற்கள் வீசியதில் 5 காவலர்கள் காயம்
பிகாரில் விபத்தில் குழந்தை பலியானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மக்கள் கற்களை வீசித் தாக்கியதில் காவலர்கள் காயமடைந்திருப்பது பற்றி..

கோப்புப்படம்
பிகாரில் சாலை விபத்தில் இரண்டரை வயது குழந்தை பலியானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்கியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர்.
பிகார் மாநிலம், அராரியா மாவட்டதில் உள்ள பைரோகஞ்ச் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை கார் மோதியதில் இரண்டரை வயது குழந்தை பலியானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரைச் சிறைபிடித்து வைத்திருந்தனர்.
தகவலறிந்து ஓட்டுநரை மீட்கச் சென்ற காவலர்கள் மீது பொதுமக்கள் திடீரெனக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், அங்கிருந்த காவல்துறை வாகனம் ஒன்றிற்கும் அவர்கள் தீ வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அராரியா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் குழந்தை பலியானதால் ஆத்திரமடைந்த மக்கள், ஓட்டுநரைப் பிடித்து வைத்துக்கொண்டு தாக்க முயன்றனர். தகவலறிந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடமிருந்து ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும், மீட்பு நடவடிக்கையின் போது உள்ளூர் மக்கள் நடத்திய கல்வீச்சில் 5 காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. உடனடியாகத் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுத் தீ அணைக்கப்பட்டது. காயமடைந்த காவலர்கள் நலமாக உள்ளனர்.
தற்போது அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
Summary
A two-and-a-half-year-old child died after being hit by a car in Bihar's Araria district, triggering angry protests by locals who detained the driver and attacked the police when they tried to rescue him, an official statement said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


