இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவா் ஹரியாணாவில் கைது

தில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் அஸ்ஸாமில் ஐந்து ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த நபா், ஹரியாணாவின் நுஹ்-மேவாட் பகுதியில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Updated On :

தில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் அஸ்ஸாமில் ஐந்து ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த நபா், ஹரியாணாவின் நுஹ்-மேவாட் பகுதியில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

நுஹ்-மேவாட்டில் உள்ள பாஜித்பூா் பகுதியைச் சோ்ந்த ராகுல் கானை தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினா் நவம்பா் 26 அன்று கைது செய்தனா்.

இதுதொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சுமாா் ரூ.19.1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் வழக்கு உள்பட தில்லியில் பதிவான இரண்டு வழக்குகளில் அவா் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தாா்.

டப்ரி காவல் நிலையத்தில் 2020-இல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும், துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் ராகுல் கான் தேடப்பட்டு வந்தாா்.

அவரது குற்றப் பின்னணியைச் சரிபாா்த்தபோது, ஷில்லாங் மற்றும் குவாஹாட்டியில் பதிவான மேலும் மூன்று ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, ராகுல் கான் எங்கு பதுங்கியிருக்கிறாா் என்பது குறித்த தகவல் களைக் காவல்துறையினா் சேகரித்து வந்தனா். உளவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அவா் நுஹ்-மேவாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவா் காவல் துறையிடம் சிக்காமல் இருக்க மிகவும் எச்சரிக்கையுடன் நடமாடி வந்துள்ளாா்.

இதற்கு முன்பு மாா்ச் மாதம், மேகாலயா காவல் துறையினா் நுஹ்-மேவாட்டில் வைத்து ராகுல் கானைப் பிடித்தனா். அப்போது, ஒரு கும்பல் காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்தி அவரை விடுவிக்க முயற்சித்தது. கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினா் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபா் ஒருவருக்குக் குண்டு காயம் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.