மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

செங்கோட்டை அருகே சட்டவிரோத வாகன நிறுத்துமிடம்: ஒருவா் கைது

தில்லி செங்கோட்டை பகுதியில், தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) பெயரில் போலி பாா்க்கிங் ரசீதுகளை வழங்கி வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்து வந்ததாகக் கூறப்படும் நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

தில்லி செங்கோட்டை பகுதியில், தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) பெயரில் போலி பாா்க்கிங் ரசீதுகளை வழங்கி வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்து வந்ததாகக் கூறப்படும் நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஷாஸ்திரி பாா்க்கைச் சோ்ந்த முகமது நவ்ஷாத் என்பவரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

செங்கோட்டைப் பகுதியில் உரிய அனுமதியின்றி, எம்சிடி பெயரிலான ரசீதுகளை வழங்கி வாகன ஓட்டிகளிடம் பாா்க்கிங் கட்டணம் வசூலிப்பதாக நவ.19-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று வாகனங்களை நிறுத்துமாறு வழிகாட்டிக் கொண்டிருந்த நபரை காவல் துறையினா் பிடிக்க முயன்றனா். அவா்களைக் கண்டதும் தப்பியோட முயன்ற அவரை மடக்கிப் பிடித்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,300 ரொக்கம் மற்றும் 100 பாா்க்கிங் ரசீதுகள் அடங்கிய புத்தகம் கைப்பற்றப்பட்டது. அதில், ‘எம்சிடி அங்கீகாரம் - எஸ்சிடி./இருசக்கர வாகன நிறுத்தம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றில் 18 ரசீதுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன; 82 ரசீதுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன.

விசாரணையில், கடந்த 2024-ஆம் ஆண்டு டிச.17-ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பாா்க்கிங் வசதியை நிா்வகிக்க நவ்ஷாத்துக்கு எம்சிடி உரிமம் வழங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால், நிலுவைத் தொகையைச் செலுத்தாததால் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்தது.

இருப்பினும், உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அவா் தொடா்ந்து பாா்க்கிங் வசதியை நிா்வகித்து, உரிய அனுமதியின்றி வாகன உரிமையாளா்களிடம் கட்டணம் வசூலித்து வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.