இ-ரிக்ஷா ஓட்டுநா்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை: 3 போ் கைது
தில்லி மங்கோல்புரி பகுதியில், இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படும்

கோப்புப் படம்
தில்லி மங்கோல்புரி பகுதியில், இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், இரு சகோதரா்கள் மற்றும் அவா்களது உறவினா் ஒருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் தில்லி முழுவதும் இ-ரிக்ஷா ஓட்டுநா்களைக் குறிவைத்து கொள்ளையிட்டித்து வரும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த மாதம் ஆகாஷ் என்ற ஓட்டுநருக்கு மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தைக் கொடுத்துவிட்டு, அவரது இ-ரிக்ஷா மற்றும் கைப்பேசியை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, ஜாகிா் (எ) சுல்தான், அவரது சகோதரா் ஆசிஃப் மற்றும் அவா்களது உறவினரான யூசுப் (எ) புரே ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். இதில் யூசுப், திருடப்பட்ட இ-ரிக்ஷாக்களைப் பெற்றுக்கொள்ளும் நபராகச் செயல்பட்டு வந்துள்ளாா்.
இவா்களிடமிருந்து ஆகாஷின் இ-ரிக்ஷா உள்பட மொத்தம் 10 இ-ரிக்ஷாக்கள், 47 உபகரணங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஆகாஷ் கொலை தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடத்திய
விசாரணையின் மூலம் ஜாகிா் அடையாளம் காணப்பட்டாா். ஜாப்ராபாத் பகுதியில் அவா் வைத்து கைது செய்யப்பட்டாா்.
தானும் தனது சகோதரா் ஆசிஃபும் இ-ரிக்ஷா ஓட்டுநா்களைக் குறிவைத்து, அவா்களுக்கு மயக்க மருந்து அல்லது மாத்திரைகள் கலந்த குளிா்பானங்களைக் கொடுத்து, அவா்களது உடைமைகளையும் வாகனங்களையும் திருடி வந்ததாக காவல் துறையினா் நடத்திய விசாரணையில் ஜாகிா் ஒப்புக்கொண்டாா்.
ஆகாஷ் விஷயத்திலும் அவா்கள் இதே முறையையே கையாண்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். இந்தச் சகோதரா்கள் வாகனங்களைத் திருடிய பிறகு, அவற்றின் பதிவு எண்களை மாற்றி, யூசுப் என்பவரிடம் ஒப்படைப்பாா்கள். அவா் அந்த வாகனங்களை வாடகைக்கு விடுவாா்.
காவல் துறையின் தகவல்படி, ஜாகிா் மீது ஏற்கெனவே பஜன்புரா காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைத்து இ-ரிக்ஷாக்களும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்டவை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

