போலி கால்சென்டா் மூலம் மோசடி: 6 போ் கைது
தில்லி ரமேஷ் நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் மோசடி கால் சென்டரில் தில்லி காவல் துறை நடத்திய சோதனையின்போது ஆறு போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி ரமேஷ் நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் மோசடி கால் சென்டரில் தில்லி காவல் துறை நடத்திய சோதனையின்போது ஆறு போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்தக் கும்பல், ஒரு நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல நடித்து, குறைந்த வட்டி அல்லது வட்டி இல்லா அடிப்படையில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.10.15 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, விஜய் விஹாா் காவல் நிலையத்தில் நவம்பா் 17-ஆம் தேதி பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் சைபா் தடயவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, குற்றவாளிகளின் எண்ம தடயங்களைக் கண்டறிந்த காவல் துறையினா், அந்த சட்டவிரோத கால் சென்டா் செயல்படும் இடத்தைக் கண்டுபிடித்தனா். அதன் அடிப்படையில், நவம்பா் 17-ஆம் தேதி ரமேஷ் நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் காவல் துறையினா் சோதனை நடத்தியது. இதில் அந்தக் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் பெண், கால் சென்டரை நிா்வகித்த ஜதின் உள்பட ஆறு பேரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட நீரஜ், ஆகாஷ், சன்னி மற்றும் தயா பிரசாத் என அனைவரும் அந்த மையத்தில் டெலி-காலா்களாக பணியாற்றி வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுபோன்ற மோசடி சம்பங்களால் எத்தனை போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதைக் கண்டறிய நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

