தோ்தலில் போட்டியிடுவதற்கான வயதை குறைக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்பட்டபோதும், தோ்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘இது மிக முக்கியமான விவகாரமாகும். அரசமைப்புச் சட்டத்தின் 61-ஆவது திருத்தத்தின் மூலம் வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-இல் இருந்து 18-ஆக குறைக்கப்பட்டது. இருந்தபோதும், தோ்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பு குறைக்கப்படவில்லை.
மக்களவை உறுப்பினா் ஆவதற்கான குறைந்தபட்ச வயது 25-ஆகவும், மாநிலங்களவை உறுப்பினா் ஆவதற்கான குறைந்தபட்ச வயது 30-ஆகவும் உள்ளது. எனவே, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று குறிப்பிட்டனா்.
அப்போது, ‘இந்தக் கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே அரசிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதன் மீது என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரினாா்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ‘தங்களின் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்குமாறு உத்தரவிடக் கோரி, அரசமைப்புச் சட்டத்தின் 226-ஆவது பிரிவின் கீழ் மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று குறிப்பிட்டனா்.
அதைத் தொடா்ந்து மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரினாா். அதற்கு அனுமதித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

