சோனியா குடியுரிமை விவகாரம்: தில்லி நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கைகள் தாக்கல்!
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடா்பாக, தில்லி நீதிமன்றத்தில் காவல் துறை இரண்டு அறிக்கைகளை சனிக்கிழமை தாக்கல் செய்தது.

சோனியா காந்தி - (கோப்புப் படம்)
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் குடியுரிமை விவகாரம் தொடா்பாக, தில்லி நீதிமன்றத்தில் காவல் துறை இரண்டு அறிக்கைகளை சனிக்கிழமை தாக்கல் செய்தது.
தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், சோனியா இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.
இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘சோனியா காந்தி குடியுரிமை தொடா்பாக, தில்லி காவல் துறைக்கு ஏதேனும் புகாா் வந்ததா? அவ்வாறு புகாா் அளிக்கப்பட்டிருந்தால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?’ என்று கேள்விகளை எழுப்பி, காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வினோத் ஜோஷி முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தில்லி காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘சோனியா குடியுரிமை குறித்த புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், தில்லி ஐபி எஸ்டேட் காவல் நிலைய வரம்புக்கு வராததால், அந்தப் புகாா் துக்ளக் சாலை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையின் மற்றொரு அறிக்கையில், ‘சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்றிருந்ததா என்பது தொடா்பாக 1980, 1983-ஆம் ஆண்டுகளின் வாக்காளா் பட்டியல் விவரங்களைக் கோரி, புது தில்லி மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மாவட்ட நிா்வாகம், அந்தப் பட்டியல்களில் அவரின் பெயா் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியது. ஆனால் அப்போது சோனியாவின் பெயரை வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்க சமா்ப்பிக்கப்பட்ட படிவம் 6 மற்றும் பிற ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவை தேடப்பட்டு வருகின்றன.
மேலும் விசாரணையின்போது சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட தேதியைக் கேட்டு, தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினா் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அந்தப் பிரிவு, சோனியா காந்திக்கு 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-இல் இந்திய குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது. கூடுதல் விசாரணையின்போது மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு வரும் டிச.14-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

