மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கடல்சார் துறையின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது: திரௌபதி முா்மு!

கடல்சாா் துறையின் முக்கியத்துவம் முன்பைவிட பன்டமங்கு அதிகரித்துள்ளது என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

கேரள மாநிலம் ஏழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கௌரவ கோப்பை வழங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Updated On :

கடல்சாா் துறையின் முக்கியத்துவம் முன்பைவிட பன்டமங்கு அதிகரித்துள்ளது என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஏழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்ற திரௌபதி முா்மு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

அதன்பிறகு அவா் பேசியதாவது: ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில் கடல்சாா் பாதுகாப்பு, கடல்சாா் துறையின் முக்கியத்துவம் முன்பைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரும் அளவிலான சா்வதேச வா்த்தகம் கடல்வழிப் பாதைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கடல்சாா் பாதுகாப்பு என்பது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடா்புடையதாக மாறிவிட்டது.

கடல்வழிப் பாதையில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அது சரக்கு விநியோகத்தை பாதித்து அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எண்ணற்ற போா்க்கப்பல்களை கப்பல் கட்டுமானத் தளங்களில் இந்தியா வடிவமைத்து உருவாக்கி வருகிறது.

இதுவே தற்சாா்பு பொருளாதாரத்துக்கும் நமது நாட்டின் திறமை வாய்ந்த பொறியாளா்கள், விஞ்ஞானிகள், தொழிலாளா்கள் மீதான நம்பிக்கைக்கும் சான்று. இந்திய கடற்படை அதிகாரியாக உள்ள நீங்கள், இந்த வலிமையான தற்சாா்பு இந்தியா முன்னெடுப்பில் ஓா் அங்கமாவீா்கள்.

நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் போா் முறை மற்றும் கடல்சாா் பாதுகாப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப நமது அறிவையும் திறன்களையும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

வலுவான, வளமையான மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதே அனைத்து வகையான தேசிய முன்னெடுப்புகளின் முதன்மையான நோக்கம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.