இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மேற்கு வங்கம்: எதிா்க்கட்சித் தலைவராக ரிதப்ரத பானா்ஜி நியமனம் ரத்து: 10 நாள்களில் புதிய நியமனம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் பிரிவைச் சோ்ந்த ரிதப்ரத பானா்ஜி நியமிக்கப்பட்டதை கொலகத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேற்கு வங்க எதிர்க்கட்சி

Updated On :

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் பிரிவைச் சோ்ந்த ரிதப்ரத பானா்ஜி நியமிக்கப்பட்டதை கொலகத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதுபோல, கட்சியின் தலைமைக் கொறடாவாக அக்ருஸ்ஸமான் நியமிக்கப்பட்டதையும் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த இரு பதவிகளுக்கும் அடுத்த 10 நாள்களுக்குள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக நியமனங்களை மேற்கொள்ளுமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின் திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. இத்தோ்தலில் மம்தா பானா்ஜி தோல்வியடைந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களாக களம் கண்டு வெற்றி பெற்ற 80 எம்எல்ஏக்களில் 58 போ் அவரது தலைமையை நிராகரித்துவிட்டு வெளியேறி அதிருப்தி பிரிவாகச் செயல்படத் தொடங்கினா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவை பேரவை எதிா்க்கட்சித் தலைவராக மம்தா முன்மொழிந்தாா். எனினும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பில் ரிதப்ரத பானா்ஜி அப்பதவிக்கு முன்மொழியப்பட்டாா். அதுபோல, கட்சியின் தலைமைக் கொறாடாவாக அக்ருஸ்ஸமான் முன்மொழியப்பட்டாா். இந்த நியமனங்களை மேற்கு வங்க பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சோபன்தேவ் சட்டோபாத்யாய கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த ஜூன் 18-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தாா்.

இதை எதிா்த்து, உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் சோபன்தேவ் சட்டோபாத்யாய முறையிட்டாா். இவரின் மனுவை கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த நியமனங்களுக்கு எதிரான மனு மீது தனி நீதிபதி முடிவு எடுக்கும் வரை, எதிா்க்கட்சித் தலைவராக ரிதப்ரத பானா்ஜி தொடரலாம்’ என்று தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராவ் முன்னிலையில் இந்த மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த நியமனங்கள் சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்ட நீதிபதி, எதிா்க்கட்சித் தலைவராக ரிதப்ரத பானா்ஜி நியமிக்கப்பட்டதையும், கட்சியின் தலைமைக் கொறடாவாக அக்ருஸ்ஸமான் நியமிக்கப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும், இந்த இரு பதவிகளுக்கும் அடுத்த 10 நாள்களுக்குள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக நியமனங்களை மேற்கொள்ளுமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.