
உ.பி.: கெட்டுப்போன ராகி மாவை உட்கொண்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு!
உத்தர பிரதேசத்தில் கெட்டுப்போன ராகி மாவை உட்கொண்ட40 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பற்றி....

கோப்புப்படம்.
உத்தர பிரதேசத்தில் கெட்டுப்போன ராகி மாவை உட்கொண்ட 5 குழந்தைகள் உள்பட 40 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ஜிதியா விரதத்திற்கு முன்பு, கெட்டுப்போன ராகி (கேழ்வரகு) மாவை உட்கொண்டதால், 35 பெண்கள் மற்றும் 5 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சதா கிராமத்தில், திருவிழா தயாரிப்புகளின் ஒரு பகுதியாக மாவை பெண்கள் உட்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தலைமை மருத்துவப் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.கே. யாதவ் தெரிவித்தார். எங்கள் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது, பயப்பட தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான மாதுரி, மாவை உட்கொண்ட பிறகு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தார். கிராமவாசி பங்கஜ் குமார் கூறுகையில், 30 முதல் 35 பெண்களும் 5 குழந்தைகளும் இந்த மாவை உட்கொண்டதாகவும், அதன் பிறகு அவர்களுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டதாகவும், சில பெண்கள் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தார்.
ஜிதியா என்பது ஜிவித்புத்ரிகா விரதம் என்றும் அழைக்கப்படும் இந்து பண்டிகையாகும். இத்திருநாளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு, வளம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக விரதமிருந்து வழிபாடுகள் செய்வார்கள். விரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு பெண்கள் பாரம்பரியமாக ராகி மாவுடன் சடத்புதியா காய்கறியைச் சேர்த்து உண்பது வழக்கம்.
Summary
At least 35 women and five children fell ill after consuming suspected contaminated finger millet (ragi) flour ahead of the Jitiya fast in Uttar Pradesh's Ballia district on Friday, a health official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






