ராகி செவ்வாழை கொழுக்கட்டை
ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழை, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
தேவையான பொருள்கள்:
செவ்வாழைப்பழம் - 1
நாட்டுச் சர்க்கரை - 4 தேக்கரண்டி
திராட்சை, முந்திரிப் பருப்பு -தலா 10
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
ராகிமாவு , அரிசி மாவு - தலா கால் கிண்ணம்
பால், உப்பு, நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழை, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைச் சேர்த்து அதனுடன் ராகி மாவு, அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். அதனை குட்டி உருண்டைகளாக உருட்டி, இட்லிப் பாத்திரத்தில் வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பு, கருப்பு திராட்சை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்ததும், வேக வைத்துள்ள கொழுக்கட்டையைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





