தேங்காய், கேரட், மாங்காய், பட்டாணி சுண்டல்
பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

தேவையான பொருள்கள்
வெள்ளை பட்டாணி - 100 கிராம்
வர மிளகாய் - 4
கடுகு, உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
துருவிய கேரட், துருவிய மாங்காய் - தலா 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், ஒரு கொத்து கறிவேப்பிலை, கொத்து
மல்லி இலைகள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து, அரைத்து வைத்த தேங்காய் விழுது, துருவிய கேரட், துருவிய மாங்காய் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்க வேண்டும்.
நாகஜோதி கிருஷ்ணன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



