காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மசாலா சுண்டல்

கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

மசாலா சுண்டல்

Published On :44 வினாடிகள் முன்பு

தேவையான பொருள்கள்:

கருப்புக் கொண்டைக் கடலை - ஒரு கிண்ணம்

வெங்காயம், தக்காளி - தலா 1

கடுகு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் - தலா 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய்த் தூள், கரம் மசாலா - அரை தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் -

இரண்டு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் , உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை குக்கரில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஏழு விசில் வைத்து வேகவைக்கவும். பின்னர் வேக வைத்துள்ள கொண்டைக்

கடலையை வடிகட்டி தனியே எடுக்கவும். தேங்காயை மிக்ஸி ஜாரில் பேஸ்ட்டாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து தாளித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளிப் பழத்தைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளிப் பழம் வதக்கி மசித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை இரண்டு நிமிடம் வதக்கியவுடன், அரைத்து வைத்திருந்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து, அதனுடன் கொத்துமல்லி இலையைத் தூவி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.