புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பூரண கொழுக்கட்டை

வெல்லத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பூரண கொழுக்கட்டை

Published On :

தேவையான பொருள்கள்:

துருவிய தேங்காய் , அரிசி மாவு -தலா 1 கிண்ணம்

வெல்லம் - முக்கால் கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு -ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்கவும். வெல்லம் சுருங்கும்போது, அதில் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நெய், ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கிளறி ஒரு உருண்டை போல வரும் வரை சமைக்கவும்.

அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பும், நெய்யும் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டிகள் இல்லாத அளவுக்கு அரிசி மாவை சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, கை மூலம் உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாழை இலையில் அரிசி மாவு உருண்டையை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். தட்டியவுடன் தேங்காய்ப் பூரணத்தை மாவு மாவுக்குள் வைத்து கொழுக்கட்டை வடிவமாக உருவாக்கவும். இட்லிச் சட்டியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.