இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும்!

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? என்பது குறித்த பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும் பற்றி..

பிரதமர் நரேந்திர மோடி  - நேதாஜி கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ்

பிரதமர் நரேந்திர மோடி - நேதாஜி கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ்

Published On :

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய பேச்சுக்கு, நேதாஜி கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

யுபிஎஸ்சி-யின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி பேசிய இந்த பேச்சு வைரலான சில மணிநேரங்களிலேயே, நேதாஜியின் கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ், அந்த தகவல் தவறானது என்று பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பேச்சு குறித்த செய்தியை மேற்கோள்காட்டி, சந்திர குமார் போஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், உருது, ஹிந்துஸ்தானி என பல மொழிகள் அறிந்தவர். அவர் பல மொழி வித்தகர்தான். ஆனால், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை (Indian Civil Service exam) அவர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்; ஏனெனில், அத்தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்பட்டது.

ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தகைய தவறான தகவலை வழங்கியது யார் என்று. வரலாற்றை இத்தகைய விதமாகத் திரித்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஜெய் ஹிந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சமஸ்கிருத தேர்வு குறித்த பேச்சு குறித்து சமூக ஊடகத்தில் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சந்திர குமார் போஸ் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

என்ன பேசியிருந்தார் பிரதமர் மோடி?

கடந்த 1926-ம் ஆண்டு யுபிஎஸ்சி நிறுவப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஓராண்டு கால கொண்டாட்டங்களின் நிறைவாக அக். 1ஆம் தேதி புது தில்லியில் யுபிஎஸ்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த கடந்த 1920-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.

ஒவ்வொரு இந்தியரும் யுபிஎஸ்சி நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கொண்டாடும் தருணம் இது.

இந்த வளாகத்தில் உள்ள புகைப்படக் காட்சியகத்தைப் பார்வையிட்டபோது, ​​1920-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் இதே நடைமுறைக்கு உட்பட்டது குறித்த விவரங்களை நான் கண்டேன். அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோதிலும், சமஸ்கிருதப் பாடத்திற்கான தேர்வு ஒன்று இருந்தது என்பதும், சுபாஷ் பாபு அத்தேர்வை சமஸ்கிருத மொழியிலேயே எழுதினார் என்பதும் என் கவனத்தை ஈர்த்தது என்று பிரதமர் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், யுபிஎஸ்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.