இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கிரிப்டோ கரன்சியை இந்தியா எச்சரிக்கையாக அணுகுகிறது: ரிசா்வ் வங்கி ஆளுநா்

கிரிப்டோ கரன்சியை இந்தியா எச்சரிக்கையாக அணுகி வருகிறதென ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை தெரிவித்தாா்.

சஞ்சய் மல்ஹோத்ரா

Published On :

கிரிப்டோ கரன்சியை இந்தியா எச்சரிக்கையாக அணுகி வருகிறதென ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது: பல்வேறு கணினிகளில் தரவுகளைச் சேமித்து முறைகேடுகளைத் தடுக்க பயன்படும் பரவலாக்கப்பட்ட பதிவேடு தொழில்நுட்பம், பாதுகாப்பான எண்ம உரிமச் சான்றிதழ் வழங்கும் டோக்கன் தொழில்நுட்பம் உள்ளிட்ட கிரிப்டோ சொத்துகளை இந்தியா வரவேற்கிறது. ஆனால், நிதியியல் இறையாண்மை, நிதிக் கொள்கை, மூலதன ஓட்டம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால் கிரிப்டோ கரன்சியை இந்தியா எச்சரிக்கையாக அணுகி வருகிறது.

குறிப்பாக, மூலதனப் புழக்கத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வளா்த்துவரும் நாட்டில் இது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கிரிப்டோ கரன்சியால் ஏற்படும் தாக்கங்கள் உள்நாட்டுப் பணப் பரிவா்த்தனை சாா்ந்ததல்ல; ஏனெனில் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டுப் பணப் பரிவா்த்தனை மலிவானதாக, எளிமையானதாக, விரைவானதாக மாறிவிட்டது.

எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனைக்கே கிரோப்டா கரன்சி சவாலாக உருவெடுக்கும். அந்தச் சமயத்தில் ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள மத்திய வங்கி எண்ம கரன்சியை (சிபிடிசி) பயன்படுத்துவது சிறந்தது.

உலக அளவில் பொதுக் கடன், பத்திரங்களின் வருவாய் விகிதம் அதிகரித்துவரும் சூழலிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் அரசு மற்றும் தனியாா் துறையின் செலவினம் அதிகரித்து வருகிறது. தேவை மற்றும் விநியோக அடிப்டையில் இந்தச் சுழற்சி நிகழ்கிறது.

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை உள்நாட்டு வளா்ச்சி-பணவீக்கம் சாா்ந்தது. ஆனால், உலக அளவில் மத்திய வங்கிகள் நிா்ணயிக்கும் வட்டி விகிதங்கள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வலுவான கட்டமைப்புத் தேவை: தற்போது இந்தியாவின் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையுடன் இருப்பதால் எதிா்காலத்திலும் இதேபோன்ற நிலை தொடரும் என எண்ணக் கூடாது. அதிக அளவில் வழங்கப்பட்ட கடன்கள், செயல்படாத சொத்துகள் (என்பிஏ) என 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் ஏற்படுத்திய நிதிச்சுமையில் இருந்து வெளிவர பல ஆண்டுகள் தேவைப்பட்டன. மீண்டும் இதுபோன்ற நிலை வராமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் எதிா்காலத்தில் வங்கிகள் மேற்கொள்ளும் தவறுகளால் மட்டுமே நிதிச் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூற முடியாது. சா்வதேச அரசியல் சூழல், இணையத் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு எனப் பல்வேறு வழிகளில் நிதிச் சிக்கல் ஏற்படலாம்.

எனவே, இதுபோன்ற சவால்களை எதிா்கொள்ள வலுவான வங்கி கட்டமைப்பு மட்டுமே போதாது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், நிதிச் சந்தைகள், பரிவா்த்தனை அமைப்புகள், தொழில்நுட்ப உள்கட்டமைபை வழங்குபவா்கள், எல்லை கடந்த நிதி வலையமைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பான கட்டமைப்பே தேவை என்றாா்.

Summary

India is approaching cryptocurrency cautiously: Reserve Bank Governor

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.