ஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால்... பணம் எடுப்பது எப்படி?

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் பணம் எடுப்பது எப்படி? என்பது பற்றி...

Published On :

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தபின், வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொகை என்னவாகும்? அதனை எப்படி குடும்பத்தார் பெறுவது என்பது பற்றி ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.

நிதி முறைகேடு மற்றும் வங்கிப் பணிகள், நிதி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு நேரடியாகவே அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்ல் மூலம் மூலம் ஆர்பிஐ பல நல்ல தகவல்களை வெளியிட்டும் வருகிறது.

அந்த வகையில் தற்போது வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அதிலிருக்கும் பணத்தை எடுப்பது மற்றும் வங்கிக் கணக்கை பராமரிப்பது குறித்த சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தபின், வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கும் தொகை என்ன ஆகும்?

அத்தகைய கணக்குகளில் உரிமை கோரும் முறை இப்போது மிகவும் எளிமையாகவும் காலக்கெடுவுடனும் செய்யப்பட்டுள்ளது!

இந்த 3 படிகளைப் பின்பற்றுங்கள்:

1.உங்கள் வங்கியின் கிளை அல்லது வங்கி இணையதளத்திற்குச் செல்லுங்கள்

2. உரிமை கோரும் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்

3. தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அதைச் சமர்ப்பிக்கவும்

15 நாட்களுக்குள் கோரிக்கைத் தீர்வு

கணக்கில் நியமனதாரர்/நியமனதாரர்கள் இருந்தால், இந்தச் செயல்முறை இன்னும் விரைவாகவும் எளிதாகவும் முடியும்

குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்கு உரிமை கோரும் செயல்முறையை எளிதாக்க, இன்றே அனைவரும் அவரவர் வங்கிக் கணக்கில் நியமனதாரர்/நியமனதாரர்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பெரும்பாலும் நியமனதாரர்கள் குடும்பத்தினராக அல்லது குடும்பத்தினரின் நலம் விரும்புபவர்களாக இருப்பது நலம்.

மேலும் தகவலுக்கு https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html என்ற பக்கத்தைப் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது – விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்!

கூடுதல் தகவல்... நியமனதாரர் குடும்பத்தாராக இல்லாவிட்டால், நியமனதாரர் ஏற்படுத்தும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை குடும்பத்தாருக்கு ஏற்படலாம். எனவே, நியமனதாரர் பற்றி குடும்பத்தாருக்கு தெரிவிப்பதும், நியமனதாரர் என்றாலே, அவர் வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ள அதிகாரம் மிக்கவர் என்பது அல்ல என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொண்ட

கட்டுரையைப் படிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.