பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்கு வேண்டுமா?

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகள் தொடங்க விரும்புவோருக்கு...

கோப்புப் படம்

Published On :

குறைந்தபட்ச இருப்புத் தொகை (minimum savings balance) தேவைப்படாத வங்கிக் கணக்குத் தொடங்க விரும்பும் மக்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மோசடிகள், சைபர் பாதுகாப்பு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி நாட்டு மக்களுக்கு நேரடியாகவே வாட்ஸ்ஆப் செய்திகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (minimum savings balance) தேவைப்படாத வங்கிக் கணக்குத் தொடங்க விரும்பும் மக்களுக்கு என்று சிறப்பாக வந்திருப்பதுதான் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு என்று தெரிவித்துள்ளது.

அதாவது, வங்கிகளில் வந்துள்ள அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குதான் அதற்கான தீர்வு.

இந்த வங்கிக் கணக்குத் தொடங்க குறைந்தபட்ச இருப்புத் தொகையோ அல்லது ஆரம்ப வைப்புத்தொகையோ தேவையில்லை.

ஏடிஎம்/டெபிட் கார்டு, தொலைபேசி மற்றும் இணைய வங்கி சேவை(internet banking), சேமிப்பு கணக்கு புத்தகம் (passbook) மற்றும் காசோலைப் புத்தகம் (cheque book) போன்ற இலவச வசதிகளைப் பெறலாம்.

ஏற்கனவே உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கை எளிதாக யார் வேண்டுமானாலும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்காக மாற்றிக்கொள்ளலாம்

ஒரு சில வங்கிகளில் என்று இல்லாமல் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்படின் இங்கே கிளிக் செய்யவும் rbikehtahai.rbi.org.

இந்த வங்கிக் கணக்கு குறித்து ரிசர்வ் வங்கி சொல்வது என்னவென்றால், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லையே தவிர, அதிகபட்ச நன்மைகள் உண்டு என்று விளக்கம் கொடுக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.