மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

காவலர்களால் 3 பத்திரிகையாளர்களுக்கு பாலியல் சீண்டல்; ஆம் ஆத்மி போராட்டம்!

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...

While participating in the protest

போராட்டத்தில் ஈடுபட்டபோது... - படம் - பிடிஐ

Published On :

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளான விவகாரத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று (அக். 3) நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக மூன்று பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவர் சௌரப் பரத்வாஜ் மற்றும் கட்சித் தொண்டர்கள் நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இந்தப் புகாரானது மாவட்ட காவல்துறையிலிருந்து தில்லி குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Aam Aadmi Party workers staged a protest condemning the incident in which three female journalists were subjected to sexual harassment during a demonstration at Jantar Mantar in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.