படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

முதலீட்டை மேலும் ஈா்க்க புதிய இரு தரப்பு செயல் திட்டம்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவுக்கு முதலீடுகளை அதிகம் ஈா்க்கும் வகையில் விரைவில் புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த செயல் திட்டத்துக்கு ...

New bilateral action plan to further attract investment

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் - பிடிஐ

Published On :

புது தில்லி: இந்தியாவுக்கு முதலீடுகளை அதிகம் ஈா்க்கும் வகையில் விரைவில் புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த செயல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடந்த சுமாா் ஒன்றரை ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் புதிய செயல் திட்டம், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் உள்ள திட்டத்தின் குறைபாடுகளைச் சரிசெய்வதுடன், இரு தரப்பு முதலீட்டாளா்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் திங்கள்கிழமை பங்கேற்ற நிா்மலா சீதாராமன் இது தொடா்பாக பேசியதாவது: சமீபத்தில் சவூதி அரேபியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், 2016-ஆம் ஆண்டு கட்டமைப்பைவிட மேம்பட்டதாகவும், இரு நாடுகளின் முதலீட்டாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் அம்சங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்தது. இதுபோன்ற முதலீட்டு ஒப்பந்தங்களை ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளுடனும் இந்தியா மேற்கொண்டது.

இந்தியாவில் விரைவில் புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த செயல் திட்டம் உள்ளது. அதற்கு விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும்.

கனடா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் மூன்று நாடுகளுடன் ஒப்பந்தங்கள் முடிவாகும்.

அதே நேரத்தில் இந்தியா-–அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய-அமெரிக்க வா்த்தக உறவின் முக்கிய அம்சமாக, இந்தியாவுக்கு சாதகமாக வா்த்தக நிலை உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க விரும்புகிறது. பல ஆண்டுகளாக தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்கா கருதும் விஷயங்களை ஈடுகட்ட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது.

அதே நேரத்தில் இந்திய- சீன வா்த்தகத்தில் இந்தியாவுக்கு சாதகமாக வா்த்தக நிலை இல்லை. இதன் காரணமாக சீனாவுடனான வா்த்தக உறவிலும் அமெரிக்க பாணி அணுகுமுறையை இந்தியா பின்பற்ற முடியுமா?.

உதாரணமாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வா்த்தக சமநிலையின்மை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, வா்த்தகம் மற்றும் வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பது மட்டுமே முக்கிய அளவுகோல் என்றால், பேச்சுவாா்த்தையை எந்த அளவுக்கு நீட்டிச் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.