
எச்சரிக்கை! 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் மோசடி!
'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் மோசடி நடைபெறுவது பற்றி...

கோப்புப் படம் - ENS
நீங்கள் பொருள்கள் ஆர்டர் செய்யாமலே 'கேஷ் ஆன் டெலிவரி' பெயரில் உங்கள் வீட்டிற்கு பார்சல் அனுப்பி மோசடி நடைபெறுகிறது.
சமீப காலமாக ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது அதிகரித்துள்ள காரணத்தால் அதை வைத்து மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஆன்லைனில் நீங்கள் பொருள்கள் ஏதும் ஆர்டர் செய்யாமலேயே உங்களுடைய முகவரிக்கு பார்சல் அனுப்பி அதன் மூலமாக மோசடி நடக்கிறது.
மும்பையில் பெண் எழுத்தாளர் ஒருவர் இதுபோன்றதொரு மோசடியை எதிர்கொண்டுள்ளதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. வீட்டில் இருந்த அவருடைய மகன் அந்த பார்சலைப் பெற்றுள்ளார். பணம் கொடுத்து பார்சல் பெறும் 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் அந்த பார்சல் வந்துள்ளது.
அவருடைய மகனும், தன் அம்மாதான் ஆர்டர் செய்திருக்கிறார் என்று நினைத்து ரூ. 1,299 செலுத்தி பார்சலைப் பெற்றிருக்கிறார்கள்.
அதன்பின்னரே, அவர் வீட்டிற்கு வந்ததும் விவரம் தெரிந்து, தான் ஆர்டர் செய்யவில்லை என்று மகனிடம் கூறியுள்ளார்.
ஆனால், பார்சலில் அவருடைய பெயர், முகவரி, மொபைல் எண் அனைத்தும் சரியாக இருந்தது. அதேநேரத்தில் அனுப்புனரின் விவரங்கள் சரியாக இல்லை.
அந்த பார்சலில் ஒரு கிழிந்த, பயன்படுத்தப்பட்ட ஒரு குர்தா இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மோசடி செய்பவர்களுக்கு ஒருவரது தனிப்பட்ட விவரங்கள் எப்படி கிடைக்கின்றன, அனுப்புனரின் விவரங்கள் சரியாக இல்லாதபோது அந்த பார்சலை நிறுவனம் எப்படி டெலிவரி செய்கிறது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு அந்த டெலிவரி நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இதுவரை கேஷ் ஆன் டெலிவரி முறையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் ரூ. 1,299 இழந்தாலும் இதுபோல கேஷ் ஆன் டெலிவரி மோசடியில் பலரும் சிக்கி வருகின்றனர். சிலருக்கு இதுபோன்ற பார்சலில் பேப்பர், சோப்பு, குப்பைகள் எல்லாம் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
என்ன செய்வது?
உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் பார்சல் வருகிறதோ, அதை ஆர்டர் செய்திருக்கிறார்களா? என்று ஒருமுறை சரிபார்த்து பின்னர் பார்சலைப் பெறுவது நல்லது.
கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆன்லைன் ஆர்டர் செய்தால் பார்சலைப் பெற்று பிரித்து பார்த்த பின்னர் பணத்தை செலுத்தலாம்.
அனுப்புனரின் விவரங்கள் சரியாக இல்லை என்றால் உடனடியாக டெலிவரி செய்யும் நபரிடம் விசாரித்து பார்சலை பெற மறுத்துவிடுங்கள்.
அதேபோல நீங்கள் பார்சலைப் பெறவில்லை என்றால் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும் என்று கூறி ஒடிபி கேட்கின்றனர். ஓடிபி மூலமாக உங்கள் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மோசடி நடைபெறலாம். எனவே, அதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Summary
Be aware of COD online parcel delivery scam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






