விடியோ அழைப்பு மூலமாகவும் மோசடி நடக்கலாம்!
நிர்வாண விடியோ அழைப்பு மோசடி பற்றி...

கோப்புப் படம் - ANI
ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை மிரட்டி ரூ. 18 லட்சம் பணம் பறித்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வகைகளில் மோசடி நடக்கிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் குஷிகுடாவின் ஏ.எஸ். ராவ் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், இணையவழி மோசடி ஒன்றில் சுமார் ரூ. 18 லட்சத்தை இழந்துள்ளார்.
ஒரு பெண் அவரிடம் விடியோ அழைப்பு செய்து அதில் தன்னை நிர்வாணமாக தங்களைக் காட்டி, பின்னர் அதை பதிவும் செய்துள்ளார். பின்னர் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்றால் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் ரூ. 18 லட்சம் வரை அவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். மேலும் ரூ. 2 லட்சத்தை மாற்ற முயன்றபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. சந்தேகத்திற்கிடமான அந்தப் பரிவர்த்தனையைக் கவனித்த வங்கி மேலாளர், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
காவல்துறையினர் விரைந்து வந்து, இணையவழி மோசடி குறித்து பாதிக்கப்பட்டவருக்கு விளக்கினர். மேலும் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், அவரது வங்கிக் கணக்கில் இருந்த மீதமுள்ள ரூ. 80 லட்சம் பாதுகாக்கப்பட்டது.
எனவே இதுபோன்ற நிர்வாண விடியோ அழைப்பு வந்தால் அதனை நம்பி பேச வேண்டாம், உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது,
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
Summary
Hyderabad retired employee loses Rs 18 lakh in nude video call scam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

