தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

கவனம் தேவை! போலி மொபைல் செயலிகள் மூலமாக மோசடி!

போலி மொபைல் செயலிகள் மூலமாக மோசடி நடைபெறுவது பற்றி...

mobile apps fraud

கோப்புப்படம். - ANI

Published On :

அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், தற்போது பெரும்பாலான சேவைகள் மொபைல் செயலிகள் மூலமாகவே கிடைக்கின்றன. வங்கிகள்கூட பணப்பரிவர்த்தனைக்காக அதிகாரபூர்வ மொபைல் செயலிகளைக் கொண்டு வந்துவிட்டன.

ஆனால், அதே தோற்றத்தில் இருக்கக் கூடிய போலி செயலிகளும் பிளே ஸ்டோரில் இருப்பதால், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக பகிரப்படுவதால் கவனமுடன் கையாள வேண்டும்.

போலி செயலி மோசடி

மோசடி அல்லது போலி செயலி என்பது ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரு உண்மையான செயலியைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்படும். இதனால் உண்மையான செயலி என்று மக்கள் தவறாக நினைத்து, தங்கள் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் குறிப்பிட்ட விவரங்கள் கேட்கப்படும், அதன்படியே மக்களும் அந்த விவரங்களை அளிப்பார்கள். இதுவே மோசடியாளர்களின் நோக்கமாகும். உங்கள் விவரங்களை பெற்று மோசடிகளில் ஈடுபடுவார்கள்.

இதுபோன்ற செயலிகளுக்கான மோசடி இணைப்புகள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பகிரப்படுகின்றன.

எனவே, எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன் சம்மந்தப்பட்டவர்களிடம் அதுகுறித்த உண்மைத் தன்மையை தெரிந்துகொள்வது நல்லது.

ஏனெனில் அந்த செயலி லிங்கை கிளிக் செய்தவுடன் எளிதாக உங்கள் போனை அல்லது வங்கிக்கணக்கை அவர்கள் எளிதாக அணுக முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

சரிபார்க்கப்படாத, அறியப்படாத ஒரு நபரிடம் இருந்து, எண்களில் இருந்து வரும் லிங்க்குகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

எப்போதும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள். அதுவும் அதிகாரபூர்வ செயலி எது என்று உறுதிசெய்த பிறகே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அவசியமில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

பதிவிறக்கம் செய்வதற்கு முன் செயலியின் மதிப்பீட்டைப் (Reviews) படியுங்கள்.

இதுவரை செயலியின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கலாம். அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Summary

Cyber fraud: Be aware of mobile apps fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.