
பொது இடங்களில் சார்ஜ் போடுகிறீர்களா? இப்படியும் மோசடி நடக்கலாம்!
பொது இடங்களில் சார்ஜ் போடும்போது தகவல்கள் எடுக்கப்பட்டு அதன் மூலமாக மோசடி நடக்க வாய்ப்புள்ளது...

பொது இடங்களில் சார்ஜ் போடுகிறீர்களா? இப்படியும் மோசடி நடக்கலாம்! - கோப்புப் படம்
பொது இடங்களில் சார்ஜ் போடும்போது உங்களுடைய மொபைல் போனில் உள்ள தரவுகள் பகிரப்பட்டு அதன் மூலமாக மோசடி நடக்க வாய்ப்புள்ளது.
சாதாரணமாக மொபைல் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள நிலையில் பலரும் பயணங்களின்போது செல்லும் இடங்களில் உள்ள கடைகளில் அல்லது மற்ற பொது இடங்களில் மொபைலுக்கு சார்ஜ் போடுகிறார்கள்.
இந்நிலையில் தெரியாத அரசு சாராத இடங்களில் சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
ஜூஸ் ஜாக்கிங்
ஜூஸ் ஜாக்கிங் என்பது மொபைலில் ஒரு கேபிள் இணைத்தால் அதில் உள்ள தகவல்கள் பகிரப்படும் ஒரு வகையான இணையத் தாக்குதலாகும்.
சார்ஜ் செய்வதற்கும் தரவுப் பரிமாற்றத்திற்கும் ஒரே சாதாரண யுஎஸ்பி கேபிளைப் பயன்படுத்துகின்றனர்.
மொபைல், லேப்டாப், டேப்லெட்களில் சார்ஜிங் போர்ட் மூலம் தகவல்கள் எடுக்கப்படுகின்றன.
இதன் மூலமாக மொபைலில் உள்ள கோப்புகள் மோசடியாளர்களின் சாதனங்களுக்கு பரிமாற்றப்படும். அந்த கோப்புகள், தகவல்கள் அடிப்படையில் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் மோசடி நடக்கலாம்.
பிளாக்மெயில் செய்வது அல்லது நேரடியாக உங்களுடைய வங்கிக்கணக்கு பணபரிமாற்ற விவரங்கள் தெரிந்தால் அதன் மூலமாக பண மோசடிகள் நடக்கலாம்.
செய்ய வேண்டியது...
அறியாத, சரிபார்க்கப்படாத சார்ஜிங் போர்ட்களில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் சார்ஜ் போடும்போதும் சற்று கவனமாக கையாள்வது நல்லது.
முடிந்தவரை உங்களுடைய மொபைல் சார்ஜர் அல்லது பவர்பேங்க் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.
Summary
Be aware: charge devices in public places, Fraud can happen this way too
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





