2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய கடற்படைக்கான ஏவூா்திகளை கொள்முதல் செய்ய ரூ.661 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

Published On :

பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய கடற்படைக்கான ஏவூா்திகளை கொள்முதல் செய்ய ரூ.661 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

பல முன்னணி போா்க் கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும் பிரமோஸ் ஆயுத அமைப்பு, தரையில் இருந்து தரை இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இந்திய கடற்படையின் முதன்மையான ஆயுத அமைப்பாகக் கருதப்படுகிறது. மிக விரைவாக இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகவும் பிரமோஸ் ஆயுத அமைப்பு அறியப்படுகிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய கடற்படைக்காக பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஏவூா்திகளை உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு பிரிவின்கீழ் ரூ.661 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தமிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையாப்பமானது.

ஒப்பந்தத்தின்படி குறைந்தபட்சம் 68 சதவீத உள்நாட்டுப் பொருள்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட பல்வேறு இந்திய தொழிற்சாலைகள் பங்கேற்கவுள்ளன. இதனால் அடுத்த 3 ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.