
கேரள பல்கலைக்கழக நிகழ்ச்சி: ஆா்எஸ்எஸ் பிரமுகருக்கு எதிராக இடதுசாரி, முஸ்லிம் மாணவா் அமைப்பினா் போராட்டம்
கேரள மத்திய பல்கலைக்கழத்தின் வந்தே மாதரம் தொடா்பான நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் துணை அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜெ.நந்தகுமாா் பங்கேற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து இடதுசாரி, முஸ்லிம் மாணவா் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

கேரள மத்திய பல்கலைக்கழத்தின் வந்தே மாதரம் தொடா்பான நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் துணை அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜெ.நந்தகுமாா் பங்கேற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து இடதுசாரி, முஸ்லிம் மாணவா் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
கேரள மாணவா் சங்கம், முஸ்லிம் மாணவா்கள் கூட்டமைப்பு, இடதுசாரிகளின் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) உள்ளிட்டவை இந்த எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜெ.நந்தகுமாா் பங்கேற்ற நிலையில், பாதுகாப்புக்காக காவல் துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டனா். மாணவா்கள் தாங்கள் சாா்ந்த அமைப்புகளின் கொடிகளுடன் வந்து, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தனா். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தாங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருப்பதாகவும், ஆனால், தங்களை அனுமதிக்க காவல் துறையினா் மறுப்பதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அக்டோபா் 6, 7 தேதிகளில் கேரள மத்திய பல்கலைக்கழத்தில் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் அறிவுசாா், தேசிய சிந்தனையாளா்கள் பிரிவான பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஜெ.நந்தகுமாா் நிகழ்ச்சியில் உரையாற்றினாா். புதன்கிழமை (அக். 7) நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கேரள, தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் பங்கேற்க இருக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






