
மேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம் குறித்து...

வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் - ஏஎன்ஐ
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
இதில், ரெஜிநகரில் 79.90 சதவிகிதமும், நந்திகிராம் தொகுதியில் 80.69 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தின் முதல்வராக உள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரி, பவானிபூர், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். பிறகு நந்திகிராம் தொகுதியில் ராஜிநாமா செய்தார். இதனால் நந்திகிராம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
நந்திகிராமில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளரின் தாயார் ஹசிராணி ரத் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் தேவ், முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசியபிறகு, தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தாா். இதையடுத்து அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானை மம்தா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கிறது. ரிதப்ரதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முகம்மது எதிசமுல் ஹேக் போட்டியிட்டுள்ளார். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்திகோபால் கிரி போட்டியிட்டுள்ளார்.
இதேபோல், ரெஜிநகா் தொகுதியிலும் நெளடா தொகுதியிலும் வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சி தலைவர் ஹுமாயூன் கபீர், ரெஜிநகர் தொகுதி பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் ரெஜிநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் ஹூமாயூன் கபீரின் மகன் கோலம் நபி ஆசாத், பாஜக சார்பில் சாகரவ் சா்க்கார், மம்தா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ரபியூல் ஆலம் செளதரி, ரிதப்ரா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சபியூஜமான் ஷேக், காங்கிரஸ் சார்பில் முகம்மது அப்துல்லாஹி கைபி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
Summary
West Bengal by elections: Voter turnout in Rejinagar and Nandigram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







