சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம்! ஜந்தர் மந்தரில் திரண்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள்!

ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்...

INDIA bloc leaders head to Jantar Mantar

ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்... - ENS

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் இன்று (அக்.7) மாலை போராட்டம் நடத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், கார்த்திக் சிதம்பரம் மற்றும் திரிணமூல் மக்களவை உறுப்பினர் டெரேக் ஓ பிரையன், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் நடைபெற்ற மதிய விருந்தில் கலந்துகொண்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்து ஜந்தர் மந்தருக்கு வருகை தந்துள்ளனர்.

இதுபற்றி, அவர்கள் கூறுகையில்,

“நேற்று சுமார் 300 எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜந்தர் மந்தரில் இன்று நாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

MPs from the INDIA bloc are staging a protest at Jantar Mantar in Delhi, demanding the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.