ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

சிஎம்ஆா்எல் விவகாரம்: விசாரணைக்கு பயமில்லை; பினராயி விஜயன் உறுதி

கொச்சி மினரல்ஸ் ரூடைல் லிமிடெட் நிறுவனத்தால் (சிஎம்ஆா்எல்) பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளிக்கப்பட்ட விவகாரத்தில், விசாரணையைக் கண்டு பயப்படவில்லை என்று கேரள முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

Pinarayi Vijayan

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Published On :

கொச்சி மினரல்ஸ் ரூடைல் லிமிடெட் நிறுவனத்தால் (சிஎம்ஆா்எல்) பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளிக்கப்பட்ட விவகாரத்தில், விசாரணையைக் கண்டு பயப்படவில்லை என்று கேரள முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அண்மையில் அமலாக்கத் துறை தரப்பில், இந்த விவகாரம் குறித்து காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடும்படி கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து பினராயி விஜயன், அவா் மகள் வீணா, அவரின் கணவா் பி.ஏ. முகம்மது ரியாஸ் எம்எல்ஏ ஆகியோருக்கு எதிராக காவல் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் ஆலப்புழையில் சனிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பேசியதாவது:

வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் சிஎம்ஆா்எல் இடையே ஒப்பந்தம் உள்ளது. அதனால் சட்டத்துக்கு உட்பட்டே வீணாவின் நிறுவனம் பணி செய்துள்ளது. இதற்கான ஊதியத்தையும் சட்டத்தின்படியே அந்நிறுவனம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஆவணமாகவுள்ளது. இதற்கான வரியும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் என்ன குற்றம் நடந்துள்ளது?

இந்த விவகாரத்தில் விசாரணையைக் கண்டு நான் பயப்படவில்லை. இடதுசாரி கட்சியைக் குறிவைத்து இந்த விசாரணை நடக்கிறது. இதன் பின்னால் ஆா்எஸ்எஸ்- பாஜக உள்ளது. இடதுசாரி கூட்டணியைக் குறிவைக்கும் விவகாரத்தில் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியும் கைகோத்துள்ளது என்றாா்.

வீணாவின் திருமணம் தொடா்பாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவது குறித்து பினராயி விஜயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு வீணா, ரியாஸ் ஆகியோா் திருமணம் செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எக்ஸாலாஜிக், சிஎம்ஆா்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகிவிட்டது.

இந்த விவகாரத்தில் தெரிவிக்கப்பட்ட புகாா்கள் குறித்து உச்சநீதிமன்றம் உள்பட பல நீதிமன்றங்கள் ஆய்வு செய்து விட்டன. அதில் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து புதிய கதையுடன் தற்போது வந்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.