காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பினராயி விஜயன் மீதான வழக்கில் அமலாக்கத் துறை அறிக்கை குறித்து விசாரணை ஏன்? கேரள அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீதான முறைகேடு குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கை குறித்து விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? என மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

Pinarayi Vijayan

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Published On :

‘கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீதான முறைகேடு குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கை குறித்து விசாரிக்க உத்தரவிட்டது ஏன்?’ என மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

தங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் அவரது கணவா் முகமது ரியாஸ் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம் இவ்வாறு கேள்வியெழுப்பியது.

தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதாகக் கூறி வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்) நிறுவனம் ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை பினராயி விஜயன், வீணா , முகமது ரியாஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாநில காவல் துறைக்கு அறிக்கை சமா்ப்பித்தது.

ஆனால் அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையை முழுமையாக ஏற்காமல் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு நியமித்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி அமலாக்கத் துறை அறிக்கை அடிப்படையில் பினராயி விஜயன், வீணா மற்றும் முகமது ரியாஸ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, இரு எஃப்ஐஆா்களை லஞ்ச ஒழிப்புத் துறையும் பதிவு செய்தது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி: இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.நடராஜன் மற்றும் ஜான்சன் ஜான் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மனுதாரா்கள் மீது ஏற்கெனவே எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிா்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? ஒரு குற்றவியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் அல்லது குற்றஞ்சாட்டப்படக் கூடியவா் மீது எஃப்ஐஆா் பதியும் முன் எப்போதும் விசாரணை நடத்தப்படுமா? அமலாக்கத் துறை சமா்ப்பித்த அறிக்கையை விசாரிக்க மாநில அரசு எஸ்ஐடி அமைத்தது ஏன்?’ என கேள்வியெழுப்பினா்.

அப்போது கேரள அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை வழக்குரைஞா் ஜாஜு பாபு, அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவே விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.