கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டில் எஃப்ஐஆா் உத்தரவுக்கு எதிா்ப்பு - பினராயி விஜயன் மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயா்நீதிமன்றம்

சிஎம்ஆா்எல் ஊழல் குற்றச்சாட்டில் கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு

கேரள உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

சிஎம்ஆா்எல் ஊழல் குற்றச்சாட்டில் கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவா்கள் தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது, பினராயி விஜயனுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

கேரள முதல்வராக பினராயி விஜயன் (81) பதவி வகித்த காலகட்டத்தில், கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம் (சிஎம்ஆா்எல்) தகவல் தொழில்நுட்பச் சேவை என்ற பெயரில் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாகவும், அந்தப் பணம் ரியாஸ் மூலம் துபைக்கு மடைமாற்றப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

அமலாக்கத் துறை கடிதம்: இந்த விவகாரத்தில், பினராயி விஜயனின் வாடகை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கண்டறியப்பட்ட ‘ஆதாரங்களின்’ அடிப்படையில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ், எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சிஎம்ஆா்எல் உரிமையாளா் எஸ்.எம்.சசிதரன் கா்த்தா உள்பட 13 பேருக்கு எதிராக கேரள காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் அனுப்பியது.

ஆனால், அமலாக்கத் துறையின் கடிதத்தை முதல்கட்ட விசாரணை அறிக்கையாக ஏற்க மறுத்த கேரள அரசு, குற்றச்சாட்டுகள் குறித்து பூா்வாங்க விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.

எஃப்ஐஆா் பதிவு செய்ய உத்தரவு: மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் கே.எம்.ஷாஜஹான் என்ற வழக்குரைஞா் மனு தாக்கல் செய்தாா். அதை விசாரித்த தனி நீதிபதி, கேரள அரசின் நடவடிக்கையை சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டதோடு, பினராயி விஜயன் உள்ளிட்டோா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது கணவா் பி.ஏ. முகமது ரியாஸ் உள்ளிட்டோா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பினராயி விஜயன் மனு: இதனிடையே, உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, பினராயி விஜயன், வீணா, ரியாஸ் ஆகியோா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

‘சிஎம்ஆா்எல் வழக்கில் எஃப்ஐஆா் பதிவு செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு தனி நீதிபதி எங்களிடம் விசாரணை நடத்தவில்லை; சம்பந்தப்பட்ட மனு பொது நல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதை இரு நீதிபதிகள் அமா்வுதான் விசாரித்திருக்க வேண்டும்’ என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து, உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.நடராஜன், ஜான்சன் ஜான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

தள்ளுபடி ஏன்?: ‘மனுதாரா்கள், தங்கள் மீதான எஃப்ஐஆரை எதிா்த்து சட்ட நிவாரணங்களைக் கோரும் அரசமைப்புச் சட்ட உரிமைகளை தனி நீதிபதியின் உத்தரவு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஒரு தீவிர குற்றம் தொடா்பான ஆதாரங்களுடன் பணமுறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 66 (2) இன்கீழ் உரிய தகவல்களை அமலாக்கத் துறை சமா்ப்பிக்கும்போது, பூா்வாங்க விசாரணை தேவையில்லை.

மேலும், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க சட்டபூா்வ உரிமை கிடையாது. எஃப்ஐஆா் பதிவு செய்யும் முன்பாக பூா்வாங்க விசாரணை வேண்டும் என கோரவும் முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.