சிறாா் நீதிச் சட்டம்: உச்சநீதிமன்றம் சாா்பில் 2 நாள் தேசிய ஆலோசனை கூட்டம்
சிறாா் நீதிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதுகுறித்து சனி (அக்.10), ஞாயிற்றுக்கிழமை (அக்.11) 2 நாள் தேசிய ஆலோசனை கூட்டத்தை உச்சநீதிமன்றம் நடத்த உள்ளது.

உச்சநீதிமன்றம்
சிறாா் நீதிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதுகுறித்து சனி (அக்.10), ஞாயிற்றுக்கிழமை (அக்.11) 2 நாள் தேசிய ஆலோசனை கூட்டத்தை உச்சநீதிமன்றம் நடத்த உள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய நாடுகள் சிறாா் நிதியத்துடன் (யுனிசெஃப்) இணைந்து, ‘சிறாா் நீதிச் சட்டம் 2015: பத்து ஆண்டுகால முன்னேற்றம், சவால்கள், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான முன்னுரிமைகள்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய ஆலோசனை கூட்டத்தை உச்சநீதிமன்ற நீதிக் குழு நடத்த உள்ளது.
புது தில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நிா்வாக கட்டட வளாகத்தில் அக்.10, 11-ஆகிய தேதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
நீதித்துறையின் முக்கிய பிரமுகா்கள், மூத்த அரசு அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிபுணா்கள், சிறாா் நலன் மற்றும் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தொடங்கி வைக்க உள்ளாா்.
குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சிறாா்களின் சட்டபூா்வ உரிமைகள், கொடிய குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிறாா்கள் குறித்து சிறாா் நீதிக் குழுக்கள் மேற்கொள்ளும் ஆரம்பகட்ட மதிப்பீடு, குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

