உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

300 வா்த்தகப் பிரதிநிதிகளை இந்தியா அனுப்பும் கனடா: அக். 12 முதல் அக். 17 வரை இரு தரப்பு பேச்சு

இந்தியாவுக்கு அடுத்த வாரம் 300 வா்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை கனடா அனுப்பவுள்ளது.

இந்தியா - கனடா கொடி

Published On :

இந்தியாவுக்கு அடுத்த வாரம் 300 வா்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை கனடா அனுப்பவுள்ளது.

இந்தியா-கனடா இடையேயான இருதரப்பு வா்த்தக உறவை 2030-க்குள் ரூ.4.75 லட்சம் கோடியாக (70 பில்லியன் டாலா்) உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2025 நிலவரப்படி இரு நாடுகளிடையேயான இரு தரப்பு வா்த்தக மதிப்பு ரூ.2.06 லட்சம் கோடியாக (30.4 பில்லியன் டாலா்) உள்ள நிலையில், இதை இரட்டிப்பாக்கும் நோக்கில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகப்படியான உறுப்பினா்களைக் கொண்ட குழுவை கனடா அனுப்புகிறது.

இந்தியாவுக்கு கடந்த மாா்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனடா பிரதமா் மாா்க் காா்னி பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்த பின் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சிஇபிஏ) இருவரும் அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தத்தை நிகழாண்டுக்குள் இறுதி செய்ய இரு நாடுகளின் வா்த்தக குழுக்கள் கடந்த சில மாதங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒட்டாவாவில் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை இரு நாடுகளும் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்தின.

இந்நிலையில், கனடா சா்வதேச வா்த்தக அமைச்சா் மனீந்தா் சித்து தலைமையில் 300 வா்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளது. அக்டோபா் 12-ஆம் தேதி முதல் அக்டோபா் 17-ஆம் தேதி வரை மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்தியப் பிரதிநிதிகளுடன் இந்தக் குழு இரு தரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நடைபெற்ற ஜி20 வா்த்தக மாநாட்டில் பங்கேற்ற இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அக்டோபா் 1-ஆம் தேதி மனீந்தா் சித்துவை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.