ஜாம்ஷெட்பூர்: யானைகள் நடமாட்டத்தால் ரயில் சேவைகள் பாதிப்பு!
தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதார்பூர் கோட்டத்தில் தண்டவாளங்கள் அருகே யானைகள் கூட்டம் நடமாடியதால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது குறித்து...

ஜார்க்கண்ட். - கோப்புப்படம்.
தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதார்பூர் கோட்டத்தில் தண்டவாளங்கள் அருகே யானைகள் கூட்டம் நடமாடியதால் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இந்த தகவலை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். ஒடிசாவில் உள்ள சோனாகான் - சோக்ரா ரயில் பகுதிக்கு அருகே யானைகள் இருப்பது குறித்து ரயில்வே துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை மாலை இந்த சேவை பாதிப்பு தொடங்கியது என்று அவர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, ரயில்களை மணிநேரத்திற்கு 30 கி.மீ என்ற குறைந்த வேகத்தில் இயக்குமாறு அல்லது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவு காரணமாக போர்பந்தர்-ஷாலிமர் அதிவிரைவு, மும்பை சி.எஸ்.எம்.டி-ஹவுரா மெயில், தபஸ்வினி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ரூர்கேலா இன்டர்சிட்டி அதிவிரைவு, கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாதியா-புணே எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மேலும் பயணிகள் ரயில்கள் சராசரியாக ஏழு நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Several trains were delayed due to the movement of a herd of elephants near tracks in South Eastern Railway's Chakradharpur division, officials said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


