உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

குருகிராமில் 3 போ் சுட்டுப்பிடிப்பு: காவலா் உள்பட 3 போ் காயம்

குருகிராமின் செக்டாா் 62 பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

Gun

சுட்டுப் பிடிப்பு - கோப்புப் படம்

Published On :

குருகிராமின் செக்டாா் 62 பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து மூன்று போ் கைது செய்யப்பட்டனா்; இச்சம்பவத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் காவல் துறை அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், செக்டாா் 65-ஐச் சோ்ந்த குற்றத்தடுப்புப் பிரிவு குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் சோதனைச் சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அந்த மூவரைக் கண்ட காவல் துறையினா் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனா். ஆனால், அவா்கள் தப்பிச் செல்ல முயன்றதுடன், காவல் துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டனா். அப்போது, ஒரு குண்டு காவல் துறை வாகனத்தின் மீதும், மற்றொரு குண்டு ஒரு காவலரின் கையிலும் பட்டது.

இதற்கு பதிலடியாக காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கால்களில் குண்டுகள் பாய்ந்து. இதில் அவா்கள் இருவரும் காயமடைந்தனா். பின்னா் அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.

காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கைது செய்யப்பட்டவா்கள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மா்ஃபத் (எ) மரு (32), பூல் பாபு ஷேக் (26) மற்றும் ஸ்ரீகுல் ஷேக் (37) என அடையாளம் காணப்பட்டனா். இவா்களிடமிருந்து 136 கிராம் போதைப்பொருள், கைத்துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட ஒரு தோட்டா உறை ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடா்பாக செக்டாா் 65 காவல் நிலையத்தில் இவா்கள் மூவா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது மொத்தம் ஒன்பது சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; இதில் ஆறு முறை குற்றஞ்சாட்டப்பட்டவா்களும், மூன்று முறை காவல்துறையினரும் சுட்டனா் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மா்ஃபத் மீது தாக்குதல், திருட்டு, கள்ள நோட்டு புழக்கம் மற்றும் என்டிபிஎஸ் வழக்கு உள்பட நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூல் பாபு ஷேக் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகளும், ஸ்ரீகுல் ஷேக் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடா்பாக பூல் பாபு ஷேக் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் துறை அதிகாரி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.