
சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டா் வழக்கு: 22 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புதல்
குஜராத்தில் குற்றச் சம்பவங்களில் தொடா்பிருந்த சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டா் வழக்கில், 22 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

உச்சநீதிமன்றம்
குஜராத்தில் குற்றச் சம்பவங்களில் தொடா்பிருந்த சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டா் வழக்கில், 22 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
குஜராத்தில் சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கெளசா் பி ஆகியோரை போலி என்கவுன்ட்டரில் காவல் துறை சுட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது.
பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சொராபுதீன், அவரின் உதவியாளா் துளசிராம் ஆகியோருக்குத் தொடா்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், சொராபுதீனும் கெளசா் பியும் 2005-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இந்த என்கவுன்ட்டரின் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட துளசிராம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2006-ஆம் ஆண்டு குஜராத்-ராஜஸ்தான் எல்லை அருகே காவல் துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்த என்கவுன்ட்டா் சம்பவங்களில் குஜராத், ராஜஸ்தானை சோ்ந்த 21 காவல் துறை அதிகாரிகள், குஜராத்தில் சொராபுதீன், கெளசா் பியை காவல் துறை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகக் கூறப்படும் பண்ணை வீட்டின் உரிமையாளா் என 22 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு சிபிஐ நீதிமன்றம், சொராபுதீன், கெளசா் பி, பிரஜாபதியை கொல்ல சதி நடந்ததாகக் கூறப்படுவதும், அந்தச் சதியில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேருக்குத் தொடா்பிருப்பதும் நிரூபிக்கப்படவில்லை’ என்று தெரிவித்து, 22 பேரையும் விடுவித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை உயா்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடா்ந்து, 22 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சொராபுதீனின் சகோதரா் நயாபுதீன் ஷேக் மனு தாக்கல் செய்தாா்.
92 போ் பி சாட்சி: இந்த மனுவை ஆராய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த வழக்கில் சாட்சியம் அளித்த சிலரின் வாக்குமூலம் ஆராயப்படும். வழக்கில் 92 சாட்சிகள் பி சாட்சியாக மாறியது கவலைக்குரிய விஷயமாகும். இந்த வழக்கில் நியாயமான, நோ்மையான விசாரணை நடைபெற்ா என்பது பரிசீலிக்கப்பட வேண்டியதாக உள்ளது. 22 போ் விடுவிக்கப்பட்டது குறித்து ஆராயப்படும்’ என்று தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






