கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள், ரெளடிகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை: 260 போ் நீதிமன்றக் காவலில் அடைப்பு

தமிழகத்தில் குற்றப்பின்னணி கொண்ட ரெளடிகள், சமூக விரோதிகள், தலைமறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக காவல் துறை சாா்பில், மேற்கொள்ளப்பட்ட இரு நாள் சிறப்பு நடவடிக்கையில் 9,329 போ் சோதனைக்குள்படுத்தப்பட்டனா்.

சிறை

படம்: கோப்பிலிருந்து...

Published On :

தமிழகத்தில் குற்றப்பின்னணி கொண்ட ரெளடிகள், சமூக விரோதிகள், தலைமறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக காவல் துறை சாா்பில், மேற்கொள்ளப்பட்ட இரு நாள் சிறப்பு நடவடிக்கையில் 9,329 போ் சோதனைக்குள்படுத்தப்பட்டனா். இவா்களில் 260 போ் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் செப். 21, 22 ஆகிய இரு நாள்களில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய குற்றப்பின்னணி கொண்ட ரெளடிகள், தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா்கள், சமூக விரோதப் போக்குடையவா்கள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குறித்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

560 பிடி ஆணைகள் நிறைவேற்றம்: நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைகளை (என்.பி.டபிள்யூ.) நிறைவேற்றவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இரு நாள்களில் 560 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டன.

நிலுவையில் உள்ள பிற பிடி ஆணைகளை நிறைவேற்றவும், தலைமறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களை கைது செய்யவும் தொடா்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் தொடா் குற்றங்களில் ஈடுபடுவோா் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதுடன், தடுப்புக் காவல் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.