என்னைக் கடத்திச் சென்றனர்: யூடியூபர் துருவ் ரதீ குற்றச்சாட்டு!
தில்லி போராட்டத்திற்கு முன்னதாக தன்னை காவல்துறையினர் கடத்திச் சென்றதாக பிரபல யூடியூபர் துருவ் ரதீ குற்றம் சாட்டியுள்ளார்.

யூடியூபர் துருவ் ரதீ
தில்லி போராட்டத்திற்கு முன்னதாக தன்னை காவல்துறையினர் கடத்திச் சென்றதாக பிரபல யூடியூபர் துருவ் ரதீ குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் என பலரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள விமானத்தில் தில்லி சென்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்பட அக்கட்சியின் 3 முக்கிய தலைவர்களை விமானத்தில் வைத்தே தில்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் தாமதமாக விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோன்று, அரசியல் விமர்சனங்கள் செய்யும் பிரபல யூடியூபர் துருவ் ரதீயை இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, அவரது வீட்டிலிருந்து சாதாரண உடையில் வந்த 20 பேர் கடத்திச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் துருவ் ரதீ விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “போராட்டத்திற்கு முன்பாக குருகிராமில் உள்ள என் வீட்டில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது என் வீட்டிற்கு சாதாரண உடையில் வந்த சுமார் 20 பேர் என்னை வீட்டிற்கு வந்தனர். அவர்கள் யார் என்று கேட்பதற்கு முன்பே என்னை அழைத்துச் சென்றனர்.
எனது வழக்குரைஞரைத் தொடர்புகொள்ளவோ, தொலைபேசியைப் பயன்படுத்தவோகூட நான் அனுமதிக்கப்படவில்லை. என் படுக்கையறையிலிருந்து என்னை வெளியே அழைத்துச் செல்கையில் எனக்கு காயம் ஏற்பட்டது. சுமார் 22-23 மணி நேரம் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடையில் மாற்றிக்கொண்டே இருந்தனர்.
நான் அவர்களால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் என்னைக் கடத்திச் சென்றனர்” என்று தெரிவித்தார்.
தான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதை உறுதிப்படுத்த தனது கடவுச்சீட்டை காண்பித்த ரதீ, போராட்டத்திற்கு முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை "அதிகாரப்பூர்வமற்ற அவசரநிலை" என்று குறிப்பிட்டார்.
Summary
Popular YouTuber Dhruv Rathee alleged that the police abducted him prior to the Delhi protest.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

