தொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

கடைசி நாளில் ஆடுகளம் வெலிங்டன் ஆடுகளம் போல் மாறிவிடும்: துருவ் ஜுரெல்

கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் கடைசி நாளில் வெலிங்டன் ஆடுகளம் போல் மாறிவிடும் என இந்திய வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

படம் | AP

Updated On :

கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் கடைசி நாளில் வெலிங்டன் ஆடுகளம் போல் மாறிவிடும் என இந்திய வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் நியூசிலாந்து அணி 243 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், ஆடுகளம் கடைசி நாளில் பேட்டிங்குக்கு சாதகமாக மாறிவிடும் எனவும், கடைசி நாளில் ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் உலர்ந்து பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது. ஆடுகளம் வெலிங்டன் போன்று மாறிவிடும் என நினைக்கிறேன். ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது, பேட்டிங் செய்வது மிகவும் எளிதாகிவிடும் என நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் இறுதிக்கட்ட பேட்டர்கள் விளையாட வரும்போது, அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையளிக்க நான் முயற்சிக்கிறேன். பந்துவீச்சாளர்கள் தடுப்பாட்டத்தை விரும்பமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்கு உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.

முதல் இன்னிங்ஸில் துருவ் ஜுரெல் 88 ரன்கள் எடுத்தார். அணியின் இறுதிக்கட்ட பேட்டர்களான ஆகாஷ் தீப், குர்னூர் பிராருடன் இணைந்து துருவ் ஜுரெல் சிறப்பாக ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கடைசி மூன்று விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian player Dhruv Jurel has stated that the Christchurch pitch will transform into something resembling the Wellington pitch by the final day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.