எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் செல்போன்களை காவல் துறை பறிமுதல் செய்தது குறித்து...

செளரவ் தாஸ் - ஏஎன்ஐ
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் தாஸ் இன்று (அக். 11) தெரிவித்தார்.
தில்லியில் இது தொடர்பாக சௌரவ் தாஸ் பேசியதாவது:
போராட்டக்களத்தில் காவல் துறையினர் எங்கள் செல்போன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், அதற்கான பறிமுதல் ஆவணத்தை அவர்கள் வழங்கவில்லை. எங்கள் செல்போன்கள் ஹேக் (hack) செய்யப்பட்டிருக்கலாம் அல்லது குளோன் செய்யப்பட்டிருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.
கடந்த காலங்களில் பிற சமூக செயல்பாட்டாளர்களுக்கு நேர்ந்ததைப் போலவே, பிற்காலத்தில் ஆதாரங்களாகக் காட்டுவதற்காக, போலியான ஆவணங்களையோ அல்லது பிற பொருள்களையோ எங்கள் சாதனங்களில் திணிக்கும் நோக்கத்துடன் அவர்கள் அவற்றை ஹேக் செய்திருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
எங்கள் செல்போன்களின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் இங்கே தெரிவிக்க விரும்புகிறோம்." எனக் குறிப்பிட்டார்.
Summary
Our mobile phones confiscated; might have been hacked CJP’s Saurav Das
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

