தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மணிப்பூா் வன்முறை: உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்வு: முதல்வா் கண்டனம்!

மணிப்பூரில் குகி-நாகா சமூகத்தினரிடையேயான மோதலில் கொலை செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

மணிப்பூர் முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்

Published On :

மணிப்பூரில் குகி-நாகா சமூகத்தினரிடையேயான மோதலில் கொலை செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

மணிப்பூரின் காம்ஜோங் மற்றும் உக்ருல் மாவட்டங்களில் குகி-நாகா சமூகத்தினரிடையே வெடித்த மோதலில் 5 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்த நிலையில், தற்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மணிப்பூா் முதல்வா் கெம்சந்த் சிங் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘வன்முறை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

வன்முறை நிகழும் பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை நிலைநாட்டி இயல்புநிலை திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தங்களது பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்ப அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கெம்சந்த் சிங் எடுத்துரைத்தாா். அப்போது மணிப்பூரில் அமைதி திரும்பத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் மோடி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் குகி மற்றும் நாகா சமூகத்தினரிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா்ந்து வரும் மோதலில் 40-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

நாகாலாந்தில் ஒருவா் கொலை: நாகாலாந்தின் கிஃபிா் மாவட்டத்தில் திருவிழாவின்போது திகிா் மற்றும் இம்கியுங் ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

மோதலின்போது பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நாகாலாந்து துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான யான்துங்கோ பேட்டன் மோதலை கைவிடுத்து இரு குழுக்களும் அமைதி வழியில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.