மமதாவை கத்தியால் தாக்க முயன்ற புகார் ஆதாரமற்றது! - மே.வங்க காவல்துறை அறிவிப்பு!
மமதா பானர்ஜியை கத்தியால் தாக்க முயன்ற புகாரானது ஆதாரமற்றது என கொல்கத்தா நகர காவல்துறை தெரிவித்துள்ளது...

மேற்கு வங்க மமதா பானர்ஜி - பிடிஐ
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை கத்தியால் தாக்க முயன்ற புகாரானது ஆதாரமற்றது என கொல்கத்தா நகர காவல்துறை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி காளிகாட்டில் உள்ள தனது வீட்டின் அருகில் செவ்வாய்க்கிழமை (அக். 13) மாலை துர்கா பூஜை விழாவை தொடங்கிவைத்தார்.
அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தகாத வாா்த்தைகளால் திட்டிக்கொண்டு, போதையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக மம்தாவை நெருங்க முயன்றார். மேலும், அந்தப் பெண் மமதாவின் உறவினர் என்றும், அவா் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்றதாக முன்வைக்கப்படும் புகார் குறித்து எந்தவொரு ஆதாரமோ அல்லது உண்மையோ இல்லை என கொல்கத்தா காவல்துறை ஆணையர் அஜய் குமார் நந்த் இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். இந்த விவகாரத்தில், எந்தவொரு ஆதாரமோ அல்லது உண்மையோ இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் காவல் நிலையத்தில் புகாரளித்தார். முன்னாள் முதல்வர் மமதாவுக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Police has announced that the allegation regarding a stabbing attack on West Bengal exCM Mamata Banerjee is baseless.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

