சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சௌதியில் இந்தியா்கள் எச்சரிக்கையாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

சௌதி அரேபியாவில் உள்ள இந்தியா்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

India condemns attack on Saudi Airport
Published On :

சௌதி அரேபியாவில் உள்ள இந்தியா்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சௌதி அரேபிய தலைநகா் ரியாதில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையை (சௌதி-ஹௌதி மோதல்) கருத்தில் கொண்டு, சௌதி அரேபியாவில் உள்ள இந்தியா்கள் அனைவரும் அமைதியாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

வான்வழித் தாக்குதல் நடந்தால், அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். சௌதி அதிகாரிகள் அதிகாரபூா்வமாக வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

ரியாத் விமான நிலையம் மீது ஹௌதிக்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஹைதராபாதை சோ்ந்த முகமது யூசுஃப் அலியின் இறுதிச் சடங்கு, அவரின் குடும்ப விருப்பத்தின்பேரில் ரியாத்தில் நடைபெற்றது.

தீவிர சிகிச்சை பிரிவில் 4 போ்

தாக்குதலில் காயமடைந்த இந்தியா்களில் 4 போ் தொடா்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனா். மருத்துவமனையின் சாதாரண வாா்டில் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

தாக்குதல் காரணமாக ரியாத் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தம்மம், ஜெட்டா, மதினாவில் உள்ள விமான நிலையங்களில் சில இடா்ப்பாடுகளுடன் விமான சேவை தொடா்கிறது.

வரும் அக்.17 வரை சௌதி அரேபியாவின் ரியாத், தம்மம், ஜெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமான நிறுவனங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சௌதி ஏா்லைன்ஸ், ஃபிளைனாஸ் விமான சேவைகளை அணுகலாம்.

கத்தாா், பஹ்ரைனிலிருந்து...

அவசர காலத்தின்போது சௌதி அரேபியாவில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியா்கள், அண்டை வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக கத்தாா், பஹ்ரைன் நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் பயணம் செய்யலாம். எனினும், அந்த நாடுகளின் விதிமுறைகளின்படி, நுழைவு இசைவு (விசா) பெற்றால் மட்டுமே அங்கிருந்து பயணம் செய்வது சாத்தியம்.

உதவிக்கு...

சௌதியில் உள்ள இந்தியா்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உதவிக்கு +966-11-488469, 8002471234 (சௌதிக்குள் இருந்து மட்டும் அழைக்கலாம்) எண்களில் அழைக்கலாம். வாட்ஸ்ஆப் எண்: +966-536216082 (குறுந்தகவல்கள் மட்டும் அனுப்பலாம்). cw.rivadh@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER