‘நிதீஷ் குமாருக்காக 9 பேரைக் கொன்றுள்ளேன்’... பிகாரை அதிரவைத்த ஜேடியு எம்.எல்.ஏ.!
பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்காக 9 பேரைக் கொன்றுள்ளதாக ஜேடியு எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளதைப் பற்றி...

நிதீஷ் குமார் - அனந்த் சிங்.
பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்காக 9 பேரைக் கொன்றுள்ளதாக ஜேடியு எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிகாரில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி களம் கண்டன. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது மொகாமா தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் பிரியதர்ஷி பியூஷுக்காக அவரது மாமாவும், ஜன்சுராஜ் தொண்டருமான துலார்சந்த் யாதவ், ஜேடியு வேட்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் எம்.எல்.ஏ. அனந்த் சிங் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பிகாரின் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாரின் ஆரம்பகால அரசியல் பயணத்திற்கு உதவ 9 பேரைக் கொலை செய்துள்ளதாக எம்.எல்.ஏ. அனந்த் சிங் பரபரப்பு கருத்தைக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
பாட்னா கிராஜூவேட் தொகுதிக்கான சட்டமேலவைத் தேர்தல் வருகிற அக். 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜேடி(யு) சார்பில் நீரஜ் குமாரும், ஜன்சுராஜ் கட்சி சார்பில் அனுஜ் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
நீரஜ் குமாருக்கும் ஜேடி(யு) எம்எல்ஏ அனந்த் சிங்குக்கும் இடையேயான மோதல் காரணமாக ஜன்சுராஜ் கட்சியின் அனுஜ் சிங்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் அனந்த் சிங்.
இந்த நிலையில், அனுஜ் சிங்கின் வாக்கு சேகரிக்கும் பிரசார நிகழ்வில் எம்.எல்.ஏ. அனந்த் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “நிதீஷ் குமாரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் அவருக்காக நான் பெரும் தியாகங்களைச் செய்துள்ளேன். அவருக்காக (நிதீஷ் குமார்) நான் செய்ததைப் போன்ற தியாகத்தைக் கட்சியின் வேறு யாரும் செய்ததில்லை.
நிதீஷ் குமாரின் ஆரம்பகால அரசியல் பயணத்திற்கு உதவுவதற்காக 9 பேரைக் கொலை செய்தேன். நான் நிதீஷ் குமாரின் தீவிர ஆதரவாளர். நான் அவரது தலைமைக்கு ஒருபோதும் எதிராக இருந்ததே இல்லை. இருப்பினும், நிதீஷ் குமார் மீதான தனது விசுவாசம் மாறவில்லை. தேர்தலில் அனுஜ் சிங்கின் வெற்றியை நான் உறுதி செய்வேன்” எனப் பேசினார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளரின் உறவினரைக் கொன்று சிறையிலிருந்தபடியே சுமார் 91,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிப். 3 ஆம் தேதி சிறை வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், தான் 9 கொலைகள் செய்துள்ளதாக அவர் பேசியுள்ள விடியோ அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Mokama MLA Anant Singh stirred up a fresh controversy on Friday when he claimed that he had got ‘nine people murdered’ to help former Bihar chief minister and JD(U) supremo Nitish Kumar during the latter’s initial political journey.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

