வாக்குகள் எண்ணப்பட்டவுடன்..! - தில்லி போராட்டத்துக்கு முன்னதாக தீப்கே பதிவு!
அமைதியான போராட்டங்களால் வணிகங்கள் பாதிக்கப்படுவதில்லை என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே பதிவு...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே - படம் - பிடிஐ
தில்லியில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தும் அமைதியான போராட்டங்களால் வணிகங்கள் பாதிக்கப்படாது என அபிஜீத் தீப்கே பதிவிட்டுள்ளார்.
போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் இன்று (அக். 16) மாலை சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
அமைதியான போராட்டங்களால் வணிகங்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், அரசு ஒரு முழு நகரத்தை முடக்கி, இணையச் சேவைகளை நிறுத்தி, குடிமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அந்த நகரத்தையே போர்க்களமாக மாற்ற தீர்மானிக்கும்போதுதான் வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன.
சிஜேபி தொடங்கப்பட்ட நாள்முதல் நாங்கள் காந்தியின் வழியிலான அமைதி மற்றும் அகிம்சையைப் பின்பற்றி வருகிறோம். மும்பை, புணே, ஜெய்ப்பூர், லக்னௌ, பெங்களூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளோம்.
ஜெய்ப்பூரில் நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டபோதும் பதில் தாக்குதல் நடத்தவில்லை. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடுவதை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
நாங்கள் சலுகையையோ அல்லது சிறப்பு நடத்தைகளையோ கேட்கவில்லை. குடியரசில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய உரிமைகளைப் பின்பற்றவே நாங்கள் கேட்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். வாக்குகள் எண்ணப்பட்டவுடன் ஜனநாயகம் முடிவடைவதில்லை” எனக் கூறியுள்ளார்.
Summary
Abhijeet Dipke has posted that businesses will not be affected by the peaceful protests being held by the cjp in the Connaught Place area of Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


