இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

சிஜேபி போராட்டத்துக்கு மமதா ஆதரவு! நன்றி தெரிவித்த தீப்கேவின் பதிவு முடக்கம்!

மமதா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே வெளியிட்ட பதிவு முடக்கப்பட்டுள்ளது குறித்து...

dipke's post thanking mamata blocked

அபிஜீத் தீப்கே - மமதா பானர்ஜி - கோப்புப் படம்

Published On :

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வெளியிட்ட பதிவு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிஜேபி தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்.2) மாலை மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களுக்கு நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், “கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்” என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த, விடியோவை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரக் ஓ பிரையன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், அந்தப் பதிவைக் குறிப்பிட்டு சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (அக்.3) முன்னாள் முதல்வர் மமதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அபிஜீத் தீப்கே வெளியிட்ட பதிவானது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “பயந்துபோன அரசு அபிஜீத்தின் பதிவை முடக்கியுள்ளது” எனக் கூறி டெரக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் தில்லியின் ஜந்தர் மந்தரில் வரும் அக்.10 ஆம் தேதி அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A post by Abhijit Dipke, thanking former West Bengal Chief Minister Mamata Banerjee has been blocked in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.